TNPSC Thervupettagam

காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் - மே 25

May 27 , 2024 53 days 95 0
  • காணாமல் போன குழந்தைகளின் அவல நிலையைக் கண்டறிதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1979 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் 6 வயது ஈடன் பாட்ஸ் பள்ளிக்குச் செல்லும் போது பேருந்தில் இருந்து கடத்தப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து இது குறித்த கருத்தாக்கம் தொடங்கியது.
  • 1983 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆண்டுதோறும் எண்ணற்ற குழந்தைகள் காணாமல் போகும் நிலையை அடையாளம் கண்டு சரி செய்வதற்காக தேசிய காணாமல் போன குழந்தைகள் தினத்தை அறிவித்தார்.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்தியத் தரவுகளின்படி இந்தியாவில் 47,313க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ள நிலையில் இவர்களில் 71.4 சதவீதம் பேர் 18 வயதினை எட்டாத இளம் சிறுமிகள் ஆவர்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான தரவுகள் மேற்கு வங்காளத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் - 12,455 (1,884 சிறுவர்கள் மற்றும் 10,571 சிறுமிகள்) – காணாமல் போய் உள்ளதைக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்