TNPSC Thervupettagam

காண்டாமிருகங்களின் நிலை குறித்த அறிக்கை, 2023

October 1 , 2023 420 days 355 0
  • சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளையானது (IRF) காண்டாமிருகங்களின் நிலை, 2023 என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • ஐந்து வகை காண்டாமிருக இனங்களையும் அச்சுறுத்தி வருகின்ற வேட்டையாடுதல் நடவடிக்கைகள் ஆனது, முன்னர் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப் படாத பல பகுதிகளில் அதிகரித்துள்ளது.
  • தொடர்ச்சியான வேட்டையாடுதல் நடவடிக்கை இருந்த போதிலும் கருப்பு நிற காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • ஆப்பிரிக்காவில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சியானது எண்ணற்ற தீங்கு விளைவிக்கும் வகையிலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
  • ஆசியாவில் பதிவான வியத்தகு அளவிலான மழைப்பொழிவு மற்றும் நீண்ட கால பருவமழைக் காலங்கள் காண்டாமிருகங்களின் நேரடி மரணத்தை ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவில் 3,262 காண்டாமிருகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள பெரிய ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களின் எண்ணிக்கையானது வலுவான பாதுகாப்பின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
  • மீதமுள்ள 76 ஜாவா காண்டாமிருகங்களில் 12 காண்டாமிருகங்களின் நிலை மற்றும் இருப்பிடம் குறித்த தகவல் தெரியவில்லை.
  • சுமத்ரா காண்டாமிருகங்களைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளதால், காடுகளில் அவற்றின் எண்ணிக்கை குறித்த ஒரு நிச்சயமற்றத் தன்மையை இது அதிகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்