TNPSC Thervupettagam

காண்டாமிருகங்களுக்கான நினைவகம்

October 1 , 2022 659 days 373 0
  • காண்டாமிருகங்களின் கொம்புகளைக் கொண்டு சேகரிக்கப்பட்ட சாம்பலால் செய்யப் பட்ட நினைவுச் சின்னம் அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் திறக்கப் பட்டது.
  • மூன்று காண்டாமிருகச் சிற்பங்களைக் கொண்ட இந்த நினைவுச் சின்னத்திற்கு "ஒற்றைக் கொம்புடைய விலங்குகளின் உறைவிடம்" என்று பெயரிடப்பட்டது.
  • இதில் ஒரு ஆண் காண்டாமிருகம், ஒரு பெண் காண்டாமிருகம் மற்றும் ஒரு கன்று ஆகியவற்றின் உருவமானது இடம் பெற்றுள்ளது.
  • வெவ்வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வனக் காவலர்களின் மூன்று உருவங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
  • தீ வைக்கப்பட்ட சுமார் 2,500 காண்டாமிருகக் கொம்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பலைப் பயன்படுத்தி அசாம் மாநில அரசால் இந்தக் காண்டாமிருகச் சிலைகள் உருவாக்கப் பட்டன.
  • கடந்த ஆண்டு (செப்டம்பர் 22) உலக காண்டாமிருக தினத்தையொட்டி, காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகத்தின் கொம்புகளை ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தொலைதூரக் கருவி மூலம் அவை இயக்கப் பட்டு எரிக்கப்பட்டன.
  • அவை கடந்த 40 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டவை அல்லது கைப்பற்றப்பட்டவை.
  • அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் உலகிலேயே அதிகளவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்