TNPSC Thervupettagam

காண்டாமிருகங்கள் கணக்கெடுப்பு

April 6 , 2018 2425 days 852 0
  • தற்போது எடுக்க்கப்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டா மிருகங்களின் கணக்கெடுப்பின் படி, அசாம் மாநிலத்தின் காசிரங்கா  தேசியப்பூங்காவின் ஒற்றைக்கொம்பு காண்டா மிருகங்களின் எண்ணிக்கை 2,413 ஆக உள்ளது. இது 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட காண்டாமிருகங்களின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை விட 12க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த 2,413 காண்டாமிருகங்களில் 793 இனப்பெருக்க சக்தி கொண்ட பெண் காண்டாமிருகங்கள் உள்ளன.
  • காசிரங்கா தேசியப்பூங்கா உலகிலுள்ள ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் தொகையில் 70 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.
  • அசாம் மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனம்) NK வாசு, தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின்படி இக்கணக்கெடுப்பு அடுத்த ஆண்டும் தொடரும் என தெரிவித்துள்ளார். அனைத்து பகுதிகளிலுள்ள காண்டாமிருகங்களை கணக்கெடுக்க முடியாமையால் அடுத்த ஆண்டும் இக்கணக்கெடுப்பு தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
  • பிரம்மபுத்திரா ஆற்று மண்டலத்தையும் உள்ளடக்கிய 882 ச.கி.மீ பரப்பளவு கொண்ட காசிரங்கா தேசியப் பூங்கா 74 தனித்தனி பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
  • 2006 ஆம் கணக்கெடுப்பின்படி ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 1855 ஆக இருந்தது. இது 2009 ஆம் ஆண்டில் 2048 ஆக உயர்ந்தது. இது இந்த மூன்றாண்டுகளில் 193 காண்டாமிருகங்களின் அதிகரிப்பைக் காட்டுகிறது.
  • 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய காண்டாமிருகங்கள் தொலை நோக்குத் திட்டம் 2020 ஆனது, 2020 ஆம் ஆண்டிற்குள் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 3000 என்ற அளவை எட்டுவதற்காக தொடங்கப்பட்டது.
  • சர்வதேச காண்டாமிருகங்கள் அறக்கட்டளை, இந்திய காண்டாமிருகங்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்களை குறிப்பிடுவதற்காக, அஸ்ஸாம் வனத்துறை, போடோலாந்து பிராந்தியக் குழு, இயற்கைக்கான உலகளாவிய நிதியம் மற்றும் அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவையகம் ஆகியவற்றோடு கூட்டிணைந்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்