சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளை அமைப்பானது, 2024 அம் ஆண்டு காண்டா மிருக இனங்களின் நிலை குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தற்போது, உலகளவில் ஐந்து வகையான இனங்களிலும் ஒட்டு மொத்தமாக 28,000க்கும் குறைவான காண்டாமிருகங்களே உள்ளன.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சுமார் 100க்கும் குறைவாக இருந்த பெரிய ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையானது இன்று சுமார் 4,014 ஆகப் படிப்படியாக அதிகரித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இது 20% அதிகரித்துள்ளது.
இந்தோ-நேபாள தெராய் பகுதி, வடக்கு மேற்கு வங்காளம், அசாம் ஆகிய பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
இந்தியாவில், 2021 ஆம் ஆண்டின் இறுதியில், ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை 3,262 ஆக இருந்தது.
அவற்றில் 90%க்கும் அதிகமானவை காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ளன.
ஆப்பிரிக்காவில் காண்டாமிருக வேட்டையாடுதல் 2022 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 4% அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் குறைந்தது 586 ஆப்பிரிக்கக் காண்டாமிருகங்கள் வேட்டையாடப் பட்டன (ஒவ்வொரு 15 மணி நேரத்திற்கும் ஒன்று).