ஆந்திரப் பிரதேச முதல்வர்சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் அமராவதி சர்வதேச விளையாட்டு வளாகத்திற்கான அடிக்கல்லினை நாட்டினார்.
ஆந்திரப்பிரதேச அரசு, அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் திருப்பதி ஆகியவற்றினை விளையாட்டு நகரங்களாக மேம்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் அவர் காண்டிவா திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் 10-16 வயதிற்குட்பட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து 10 வருடகாலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கான நோக்கத்துடன் சர்வதேச அளவிலான வசதிகள் மற்றும் பயிற்சியினை அரசு அவர்களுக்கு வழங்கும்.