இந்தியாவின் மிகவும் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட ஒரு வான்வழித் தாக்குதல் எறிகணையான அஸ்ட்ரா MK-III ஆனது, தற்போது அதிகாரப்பூர்வமாக காண்டீவா என மறுபெயரிடப்பட்டுள்ளது.
எதிரி நாட்டு வான்வழி இலக்குகளை அவை 20 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள போது 340 கிலோமீட்டர் தூரத்திலிருந்தும், இலக்கு 8 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் போது 190 கிலோமீட்டர் தூரத்திலிருந்தும் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
காண்டீவா எறிகணை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்தியா உலகின் மிகவும் நீண்ட தூர தாக்குதல் வரம்புடைய BVR வான்வழி தாக்குதல் எறிகணைகளில் ஒன்றைக் கொண்டதாக விளங்க உள்ளது.
இது 300 கிலோமீட்டர்கள் தூர தாக்குதல் வரம்பைக் கொண்ட PL-15 எறிகணையைக் கொண்ட சீனாவினையும், 240 கிலோமீட்டர் தூரத் தாக்குதல் வரம்பைக் கொண்ட AIM-174 BVRAAM எறிகணையினைக் கொண்டுள்ள அமெரிக்காவினையும் இந்தியா விஞ்ச அனுமதிக்கும்.