TNPSC Thervupettagam

காண்ட்லா துறைமுக அறக்கட்டளை பெயர்மாற்றம்

October 3 , 2017 2481 days 1521 0
  • காண்ட்லா துறைமுக அறக்கட்டளையினை தீன்தயாள் துறைமுக அறக்கட்டளை என பெயர் மாற்றி கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • குஜராத்தின் கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ள காண்ட்லா துறைமுகம் இந்தியாவின் 12 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும்.
  • பண்டித் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கான ஆண்டு விழாவின் முடிவில் ஏற்படுத்தப்பட்டிருந்த நிகழ்ச்சியின் போது மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்திய துறைமுக சட்டம் 1908 ன் படி மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இப்பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காண்ட்லா துறைமுகம்
  • 1931 ல் மஹாராவ் கேன்கார்ஜி என்பவரால் கட்டப்பட்ட படகுத்துறை கட்டுமானத்திலிருந்து இத்துறைமுக தொடக்கம் தொடங்குகிறது.
  • இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது கராச்சித் துறைமுகம் பாகிஸ்தானுக்கு உரித்தான பிறகு 1950 களில் மேற்கு இந்தியாவின் முக்கிய துறைமுகமாக காண்ட்லா துறைமுகம் கட்டப்பட்டது.
  • அதிக அளவு சரக்குகளை கையாளுவதில் இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்