மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகமானது (Ministry of Micro, Small & Medium Enterprises- MSME) நாட்டில் உள்ள 40,000 காதி நிறுவனங்களை புவியிடங்காட்டுவதற்காக (locating) கைபேசி செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைக் குழுவின் (Khadi and Village Industries Commission-KVIC) 9-ஆவது தேசிய ஆணையத்தின் கூடுகை அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் இணை அமைச்சர் (Minister of State) கிரிராஜ் சிங் இச்சந்திப்பிற்குத் தலைமை தாங்கினார்.
காதி பொருட்களை சர்வதேச வியாபார அடையாளங்களாக (International brand) மாற்றுவதற்கு காதி பொருள்களின் உற்பத்தியை வெளிநாடுகளில் மேம்படுத்த காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைக் கழகமானது ஓர் ஏற்றுமதிப் பிரிவை (Export cells) அமைக்க உள்ளது.
காதி மற்றும் கிராமத் தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்களானது பிரதம மந்திரி வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டம் (Prime Minister's Employment Generation Programme - PMEGP) போன்ற திட்டங்களின் மூலம் மத்திய அமைச்சகத்தால் நிதியளிக்கப்படும் 7 இலட்சம் தனியார் வீட்டு தொழிற் உற்பத்தி அலகுகளால் உற்பத்தி செய்யப்படுகின்றது.