மத்திய வர்த்தக மற்றும் தொழிற் துறை அமைச்சகமானது காதிக்காக ஒரு தனிப்பட்ட HS குறியீட்டை ஒதுக்கியுள்ளது.
இது காதியின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.
HS (Harmonized System) என்பது ஒரு ஒத்திசைந்த அமைப்பு என்பதைக் குறிக்கின்றது. இது ஒரு ஆறு இலக்க அடையாளக் குறியீடாகும்.
இது உலகச் சுங்க அமைப்பால் (WCO - World Customs Organization) மேம்படுத்தப் பட்டது.
எந்தவொரு சர்வதேச எல்லையிலும் நுழையும் அல்லது கடக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அனுமதியளிப்பதற்கு வேண்டி சுங்க அதிகாரிகள் HS குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர்.