TNPSC Thervupettagam

காத்மாண்டு மற்றும் ரக்சூல் இடையே ரயில்வே இணைப்பு

April 12 , 2018 2422 days 787 0
  • மக்களிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தவும், பொருட்களை கணிசமான அளவு இடம் மாற்றவும் வேண்டி பீகாரின் ரக்சூல் மற்றும் நேபாளத்தின் காத்மண்டு ஆகிய பகுதிகளுக்கு இடையே யுக்திசார் இருப்புப் பாதை இணைப்பு ஒன்றை ஏற்படுத்த இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
  • மின்சாரத்தால் இயக்கப்படும் இந்த புதிய இருப்புப் பாதைக்கு நிதி வசதி இந்தியாவால் வழங்கப்படும்.

  • ஏற்கனவே, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள மற்ற ரயில்வே திட்டங்கள் நவுதான்வா - பாயிரஹாவா, நியூ ஜல்பைகுரி - ககர்பிட்டா மற்றும் நேபாள்கன்ஜ் சாலை - நேபாள்கன்ஜ் ஆகியனவாகும்.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்த இரயில் பாதைத் திட்டமானது 2016ம் ஆண்டு மார்ச் மாதம் சீனா திபெத் வழியாக நேபாளத்திற்கு யுக்தி வாய்ந்த ஒரு இருப்புப் பாதை இணைப்பை கட்ட ஒப்புக் கொண்ட இரண்டு ஆண்டு காலத்திற்குப் பின் திட்டமிடப்பட்டுள்ளது.
  • பொருட்களின் இடமாற்றம் மற்றும் இணைப்பிற்காக நேபாளம் இந்தியாவை அதிகளவு நம்பியிருக்கும் நிலையை குறைக்க சீனா திட்டமிடுகிறது.
  • சீனாவும், நேபாளமும் நீண்ட காலமாக நிலவி வந்த நம்பிக்கையின்மைக்குப் பிறகு சமீபத்தில் சரக்கு பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்