TNPSC Thervupettagam

காந்த எதிர்ப்புத் திறன்

April 24 , 2023 454 days 222 0
  • ஐக்கியப் பேரரசின் ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் கிராபினின் மற்றொரு பண்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது தேன்கூடு வடிவத்தில் பிணைக்கப் பட்ட கார்பன் அணுக்களின் ஒற்றை-அணு-கொண்ட தடிமனான ஒரு அடுக்காக உள்ளதோடு, இது இந்த 'அதிசய' பொருளை மேலும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
  • அறை வெப்பநிலையில் கிராபின் ஒரு முரண்பாடான மாபெரும் காந்த எதிர்ப்புத் திறன் தன்மையை (GMR) வெளிப்படுத்துகிறது.
  • போரான் நைட்ரைட்டின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் வைக்கப்பட்ட, 27º C வெப்ப நிலையில் உள்ள ஒற்றையடுக்கு கிராபினின் காந்த எதிர்ப்புத் திறனானது 0.1 டெஸ்லா புலத்தின் கீழ் 110% அதிகரித்துள்ளது.
  • ஒரு ஒப்பீட்டுச் செயல்முறையில், சாதாரண உலோகங்களில் இந்த நிலைகளில் காந்த எதிர்ப்புத் திறன் 1 சதவீத்திற்கும் குறைவாகவே அதிகரிக்கிறது.
  • மாபெரும் காந்த எதிர்ப்புத் திறன் என்பது ஒரு கடத்தியின் மின்னியல் எதிர்ப்புத் திறனானது அருகிலுள்ள பொருட்களில் உள்ள காந்தப்புலங்களால் பாதிக்கப்படும்.
  • இது கணினிகளில் உள்ள வன்தட்டு மற்றும் காந்த எதிர்ப்பு RAM சாதனங்கள், உயிரி உணர்விகள், வாகன உணர்திறன் கருவிகள், நுண்மின்னிய இயந்திர அமைப்புகள் மற்றும் மருத்துவ ஆய்வுப்படக் கருவிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்