பூமியின் காந்த வட துருவம் ஆனது அதிவேகத்தில் ரஷ்யாவை நோக்கி நகர்கிறது.
கடந்த சில தசாப்தங்களாக அதன் வேகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகி உள்ளது.
இது முன்பு மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது அதன் வேகம் ஆனது 1990 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 50-60 கிலோ மீட்டர்/ மணி ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் துருவமானது கனடாவில் இருந்து சைபீரியாவை நோக்கி தோராயமாக 2,250 கிலோமீட்டர்கள் நகர்ந்துள்ளது.
அனைத்து தீர்க்க ரேகைகளும் ஒன்றிணைகின்ற மிகவும் நிலையான புவியியல் வட துருவத்தைப் போலல்லாமல், காந்த வட துருவம் தொடர்ந்து மாறுகிறது.
தற்போதையப் போக்கு தொடர்ந்தால் அடுத்த பத்தாண்டுகளில் காந்த வட துருவம் 660 கிலோமீட்டர் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2040 ஆம் ஆண்டில், இது திசைகாட்டிகள் உண்மையான வடக்கிற்குப் பதிலாக சற்று கிழக்குப் புறமாக நோக்கி காட்டி உலகளாவிய வழி செலுத்துதலைப் பாதிக்கும்.
இந்த இயக்கங்கள் ஆனது, ஒவ்வொரு 3,00,000 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிகழும் ஓர் இயற்கை சுழற்சியின் ஒரு பகுதியாகும் என்பதோடு கடைசி முழு துருவ மாற்றமானது 780,000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.