TNPSC Thervupettagam

காந்தப்புலப் பண்புகள் - ரூதெனியம்

May 30 , 2018 2242 days 729 0
  • அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறை வெப்பநிலையில் விந்தையான காந்தப் புல பண்புகளை அல்லது பெர்ரோமேக்னடிசத்தை (Ferromagnetic) கொண்டிருக்கும் நான்காவது மூலக்கூறு வேதியியல் மூலக்கூறான ரூதெனியம் ஆகும் எனக் கண்டறிந்துள்ளனர்.
  • இதுவரையில், அறை வெப்பநிலையில் மூன்று தனிம அட்டவணை மூலக்கூறுகளான இரும்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் ஆகியவற்றில் மட்டுமே பெர்ரோமேக்னடிக் பண்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • ஆராய்ச்சியாளர்கள், மிக மெல்லிய இழைகளை பயன்படுத்தி பெர்ரோமேக்னடிக் பகுதியை அழுத்தியதன் மூலம் ரூதெனியம் என்பது நான்காவது ஒற்றை மூலக்கூறு கொண்ட பெர்ரோமேக்னடிக் பொருளாக இருக்கும் எனக் கண்டறிந்துள்ளனர்.

  • இந்த கண்டுபிடிப்பு காந்தப்புலப் பொருட்களை பயன்படுத்தும் உணர்விகள், கம்ப்யூட்டர் நினைவகம் அல்லது தர்க்க சூத்திர (Logic) தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் பிற பொருட்களை மேம்படுத்த உதவும்.
  • பயன்பாட்டு உபயோகத்தின் அடிப்படையில், விஷத்தன்மையுடைய ஆக்சிடேஷன் (Oxidation) முறைக்கு எதிர்ப்பு கொண்டிருப்பதோடு, காந்தப்புல நினைவலைகளை அளவிட முக்கிய தேவையாக உள்ள அதிகபட்ச வெப்ப நிலைத் தன்மையையும் கொண்டிருப்பதால் ருதெனியம் ஒரு ஆச்சரியமூட்டும் பொருளாகும்.
  • ருதெனியம், Rn என்ற அடைமொழி கொண்ட வேதியியல் மூலக்கூறுவாகும். இதன் அணு எண் (Atomic Number) 44 ஆகும்.
  • இது பிளாட்டின வகையிலான தனிம அட்டவணையைச் சார்ந்த அரிதான இடைப்பட்ட (Transition) உலோக வகையை சார்ந்ததாகும்.
  • பிளாட்டின வகையைச் சேர்ந்த மற்ற உலோகங்களைப் போல், இது பெரும்பான்மையான மற்றைய இரசாயனங்களுக்கு மந்தமாக (inert) உள்ளது.
  • இது 1844ம் ஆண்டில் இரஷ்யாவில் பிறந்த விஞ்ஞானியான கார்ல் எர்ன்ஸ்ட் என்பவரால் கண்டறியப்பட்டது.
  • இது ரஷ்யாவின் லத்தீன் பெயரைக் கொண்டு ருதெனியம் என அழைக்கப்படுகின்றது.
  • ருதெனியம் பொதுவாக பிளாட்டினம் தாதுக்களில் சிறிய பகுதியாக மட்டுமே காணப்படுகின்றது.
  • இது மின்சார இணைப்புகள் மற்றும் பட்டையான இழை கொண்ட எதிர்ப்பான்களில் அணிகலத் தடுப்பானாகவும் உபயோகிக்கப்படுகின்றது.
  • இதன் சிறிய பயன்பாடு பிளாட்டினம் கலவைகளிலும் இரசாயன ஊக்கிகளிலும் உபயோகிக்கப்படுகின்றது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்