TNPSC Thervupettagam
January 15 , 2019 2026 days 920 0
  • 2015, 2016, 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குப் பின்வரும் அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
 
  1. கிராமப்புற வளர்ச்சி, கல்வி, இயற்கைவள மேம்பாடு ஆகியவற்றில் தனது பங்களிப்பை ஆற்றியதற்காக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரா 2015-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  2. இந்தியாவெங்கிலும் உள்ள பல மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்ததில் தனது பங்களிப்பை ஆற்றியதற்காக அக்சய பாத்திர அறக்கட்டளை மற்றும் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிப்பது மற்றும் துப்புரவு நிலையை மேம்படுத்துவதில் தனது பங்களிப்பை ஆற்றியது ஆகியவற்றிற்காக பணியாற்றிய சுலப் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஆகிய இரண்டும் கூட்டாக 2016-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  3. இந்தியா முழுவதுமான மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில், கிராமப்புற மேம்பாடு, பாலின மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றிற்கு தனது பங்களிப்பை ஆற்றியதற்காகவும் கிராமப்புற மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வியை அளித்தலில் தனது பங்களிப்பை ஆற்றியதற்காகவும் ஏகல் அபியான் அறக்கட்டளை 2017-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  4. உலகெங்கிலும் மற்றும் இந்தியா முழுவதிலும் தொழுநோய் ஒழிப்பில் தனது பங்களிப்பை ஆற்றியதற்காக யோஹேய் சசாகாவா 2018-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
  • இந்த வருடாந்திர விருதானது மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தின் நினைவாக இந்திய அரசாங்கத்தால் 1995-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
காந்தி அமைதி விருது
  • காந்தி அமைதி விருதானது அஹிம்சை மற்றும் இதர காந்திய வழிகளின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியில் தங்கள் பங்களிப்பை ஆற்றிய தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது.
  • மத்திய கலாச்சார அமைச்சகமானது இவ்விருதுகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை ஏற்கும் பொறுப்புடைய நிறுவனமாகும்.
  • இந்த விருது முதன்முறையாக 1995 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதில் இருந்து நான்காண்டுகளுக்கான விருது பெறுபவர்களை அறிவித்தது இதுவே முதல் முறையாகும்.
  • இவ்விருதானது 1 கோடி நிதி, சான்றிதழ் மற்றும் ஒரு கைவினைப் பொருள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்