பிரதம மந்திரி நரேந்திர மோடி திண்டுக்கல்லில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகமான காந்தி கிராம ஊரகக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்குக் கௌரவ முனைவர் பட்டங்கள் வழங்கப் பட்டன.
காந்தி கிராம உயர்கல்விக்கான கிராமியக் கல்வி நிறுவனமானது 1956 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் நயி தலிம் என்ற கல்வி முறையைப் பரப்பச் செய்வதற்காக நிறுவப் பட்டது.
இந்த நிறுவனத்தை முனைவர் T.S. சௌந்தரம் மற்றும் முனைவர் G. ராமச்சந்திரன் ஆகியோர் மேம்படுத்தினர்.