மத்தியப் பிரதேசத்தின் மண்டசௌர் மாவட்டத்தில் உள்ள காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு சிவிங்கிப் புலிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
பவாக் மற்றும் பிரபாஷ் என்ற ஆறு வயது ஆண் சிவிங்கிப் புலிகள், 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டன.
இந்த சரணாலயத்திற்கு மாற்றப் படுவதற்கு முன்பு அவை குனோ தேசியப் பூங்காவில் தங்க வைக்கப்பட்டன.
காந்தி சாகர் சரணாலயம் ஆனது குனோ தேசியப் பூங்காவிற்கு அடுத்தபடியாக, அம்மாநிலத்தில் மட்டுமின்றி, நாட்டிலும் சிவிங்கிப் புலிகள் இடமாற்றம் செய்யப்படும் இரண்டாவது இடமாக மாறியுள்ளது.
குனோ தேசியப் பூங்காவில் தற்போது 26 சிவிங்கிப் புலிகள் காணப்படுகின்றன.