TNPSC Thervupettagam

காந்தி சாகர் சரணாலயத்தில் சிவிங்கிப் புலிகள் – மத்தியப் பிரதேசம்

June 20 , 2024 157 days 249 0
  • மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிற்கு அடுத்தப்படியாக காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் ஆனது இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அறிமுகப் படுத்தப் படுவதற்கான இரண்டாவது இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • சம்பல் நதியானது இந்தச் சரணாலயத்தின் குறுக்கே பாய்ந்து அதனை இரண்டு சம பாகங்களாக பிரிக்கிறது.
  • காந்தி சாகர் சரணாலயத்தின் சவன்னா (புல்வெளி) சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது, வறண்ட இலையுதிர் மரங்கள் மற்றும் புதர்கள் நிரம்பிய பரந்தப் புல்வெளிகளை உள்ளடக்கியதாகும்.
  • இது சவானா வனப்பகுதி மற்றும் வனவிலங்குகளுக்குப் பெயர் பெற்ற கென்யாவின் மசாய் மாரா தேசியக் காப்பகத்தினை ஒத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்