சிவிங்கிப் புலிகள் மறு அறிமுகம் திட்டம் ஆனது, தற்போது குஜராத்தில் உள்ள பன்னி புல்வெளிகள் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்திசாகர் சரணாலயத்தில் விரிவாக்கப்பட உள்ளது.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னி புல்வெளிகள், சுமார் 2,500 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு பாதுகாக்கப்பட்ட வன சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
இது ஆப்பிரிக்க சவன்னா புல்வெளிகளைப் போன்ற பகுதியளவு வறண்ட ஒரு நிலப் பரப்பைக் கொண்டுள்ளது என்பதோடு சிவிங்கிப் புலிகளுக்கு ஏற்ற வாழ்விடத்தினை இது வழங்குகிறது.
காந்திசாகர் சரணாலயம் மாண்ட்சௌர் மற்றும் நீமுச் மாவட்டங்களில் பரவியுள்ளது.
இராஜஸ்தான் மாநில எல்லையில் அமைந்துள்ள நிமார் என்றும் அழைக்கப்படும் ஒரு பகுதியானது வறண்ட, பகுதியளவு வறண்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
இந்தப் பகுதியின் புவியியல் நிலைமைகள் ஆப்பிரிக்காவில் காணப்படும் சிவிங்கிப் புலிக்கு ஏற்ற நிலப்பரப்புகளை ஒத்திருக்கின்றன.