18 வயதில் காந்தியைச் சந்தித்த பிரபல சமூக சேவகர் ஷோபனா ரனடே சமீபத்தில் காலமானார்.
தாழ்த்தப்பட்டவர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை மேம்படுத்தச் செய்வதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஆவார்.
இவருக்கு 2011 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டு புனேவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் காந்தி தேசிய நினைவு சங்கம் (GNMS) மற்றும் பெண்களுக்கான தேசிய பயிற்சி நிறுவனம் ஆகியவற்றினை அமைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.