2019-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ஆண்டை நினைவுகூர்வதற்கான தேசிய குழுவின் (National committee for commemoration of the 150th birth anniversary of Mahatma Gandhi) முதல் சந்திப்பு அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ஆண்டை நினைவுகூர்வதற்கான தேசிய குழுவின் இந்த முதல் சந்திப்பிற்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கி உள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இந்த கமிட்டியின் தலைவராவார். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர்கள், மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், மத்திய கேபினேட் உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், காந்தியவாதிகள் (Gandhians) மற்றும் ஆன்மீக குருக்கள் (spiritual gurus) மற்றும் பல்வேறு சமூகப் பணியாளர்கள் (social workers) உட்பட 114 உறுப்பினர்களை இக்குழு உள்ளடக்கியுள்ளது.
தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் 2019-ஆம் ஆண்டின் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 2020-ஆம் ஆண்டின் அக்டோபர் 2 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.