TNPSC Thervupettagam

காந்தியின் பிறந்த தின அனுசரிப்பிற்கான நினைவு ரூபாய் தாள்கள்

March 2 , 2019 2097 days 647 0
  • காந்தியின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவைக் குறிப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த நிறுவனம் பூஜ்ஜிய மதிப்பிலான 12 வங்கிகளின் முதலாவது கட்டுப்படுத்தப்பட்ட பதிப்பின் நினைவு ரூபாய் தாள்களின் வரிசையை உலகம் முழுவதும் வெளியிடும்.
  • துபாயைச் சேர்ந்த இந்தியக் கலைஞர் அக்பர் சாஹேப் இந்த சிறப்பு ரூபாய் நோட்டுகளை வடிவமைத்து இருக்கின்றார்.
  • காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, ஒவ்வொரு தாளும் அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையின் நினைவு கூறத்தக்க நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தும்.
  • 5000 என்ற எண்ணிக்கையில் மட்டும் முதல் இரண்டு தாள்கள் தனி வடிவமைப்பில் அச்சிடப்படும். மற்றவை அக்டோபர் 02 வரை வெவ்வேறு கால கட்டங்களில் வெளியிடப்படும்.
  • வெளியிடப்பட இருக்கும் முதல் இரண்டு தாள்களில், முதலாவது தாள் 1880 ஆம் ஆண்டு காந்தி தனது தாயாருக்கு அளித்த “தாயாருக்கான சத்தியம்” என்பதை வெளிப்படுத்தும்.
  • இரண்டாவது தாள் தென்னாப்பிரிக்காவில் பீட்டர்மாரிட்ஸ்பெர்க் ரயில் நிலையத்தில் ஒரு இரயிலின் வெள்ளையர்கள் மட்டும் என்ற பெட்டியிலிருந்து இளம் வழக்கறிஞர் காந்தி வெளியே அனுப்பப்பட்ட 1893 ஆம் ஆண்டு நடந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சம்பவத்தைக் காட்சிப்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்