கான மயில் (Great Indian Bustard) இனத்தின் (அர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ்) ஒரே வாழிடமாக இந்தியா விளங்குகின்றது. இது ஒரு “உயர் அச்சுறுத்தல் நிலை இனமாகும்.”
தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது கான மயிலின் எண்ணிக்கை குறித்த “தகவல் அறிக்கையை” சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்தியுள்ளது.
இராஜஸ்தானில் உள்ள காற்றாலைத் திட்டங்கள் மற்றும் மின் பரிமாற்ற இணைப்புகள் ஆகியவற்றினால் கான மயில் சந்திக்கும் அபாயங்கள் குறித்து எடுத்துக் காட்டுவதற்காக வனவிலங்கு மற்றும் சுற்றுச் சூழல் நல மையத்தினால் (CWEL - Centre for Wildlife and Environment Litigation) ஒரு மனுவானது தாக்கல் செய்யப்பட்டது.
இராஜஸ்தானின் பாலைவன தேசியப் பூங்காவில் 150 கான மயில்கள் மட்டுமே காணப்படுகின்றன.