செயற்கைக் கருவூட்டல் மூலமாக முதல் கானமயில் குஞ்சு பொரிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள தேசிய வளங்காப்பு இனப்பெருக்க மையத்தின் அறிவியலாளர்கள் இந்தச் செயல்முறையை மேற்கொண்டனர்.
கானமயில் என்பது ராஜஸ்தானின் தார் பகுதியில் காணப் படும் மிகவும் அருகி வரும் பறவை இனமாகும்.
தற்போது, 173 பறவைகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவற்றில் 128 பறவைகள் மட்டும் காடுகளில் காணப் படுவதோடு மற்றவை காப்பகங்களில் கூண்டுகளில் வளர்க்கப் படுகின்றன.