இராஜஸ்தானில் உள்ள காடுகளில் ஒரே குழுவில் குறைந்தது 12 கானமயில்கள் (GIB) தென்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் "கோடவன்" மற்றும் "மால்தோக்" என்று அழைக்கப் படும் இந்தப் பறவைகள், டெசர்ட்/பாலைவன தேசியப் பூங்காவில் (DNP) தென்பட்டுள்ளன.
GIB என்பது இராஜஸ்தானின் தார் பகுதியில் காணப்படும் மிக அருகி வரும் பறவை இனமாகும்.
இன்று, 173 பறவைகள் மட்டுமே எஞ்சியுள்ளன, அவற்றில் 128 பறவைகள் காடுகளில் காணப்படுகின்றன என்ற நிலையில் மீதமுள்ளவை உயிர்க் காப்பகங்களில் மட்டுமே வளர்க்கப் படுகின்றன.
இராஜஸ்தானைத் தவிர, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலும் இந்தப் பறவை காணப்படுகிறது.
2011 ஆம் ஆண்டில், இந்தப் பறவைகள் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் "மிக அருகி வரும் நிலையில் உள்ள இனமாக" பட்டியலிடப்பட்டன.