கின்னஸ் உலக சாதனைகளின் சமீபத்திய பதிப்பில் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரமானது உலகின் மிகவும் மாசுபட்டுள்ள நகரத்திற்கான பிரிவில் இடம் பெற்றுள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட (WHO - World Health Organization) ஒரு அறிக்கையின் படி, உலகில் மிகவும் மாசுபட்டுள்ள நகரம் வட இந்தியாவில் உள்ள கான்பூர் நகரம் ஆகும். இது 2016 ஆம் ஆண்டில் சராசரியாக 173 மைக்ரோகிராம் / மீ 3 என்ற நிலையில் PM2.5 அளவினைக் கொண்டிருந்தது.
இந்த PM2.5 (Particulate Matter – நுண்மத் துகள்) நிலையானது WHO பரிந்துரைத்த 10 மைக்ரோகிராம் / மீ 3 என்ற அதிகபட்ச அளவை விட 17 மடங்கு அதிகமாகும்.
‘கின்னஸ் உலக சாதனைகள் 2020’ என்ற புத்தகமானது ஆயிரக்கணக்கான புதிய சாதனைகளின் தலைப்புகளையும் அச்சாதனைகளை வைத்திருப்பவர்களையும் பட்டியலிடுகின்றது.
இது ஆண்டுதோறும் புத்தக வெளியீட்டாளரான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப் படுகின்றது.