TNPSC Thervupettagam

காபோன் இராணுவ ஆட்சி

September 3 , 2023 450 days 242 0
  • மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனின் இராணுவ அதிகாரிகள் தாங்கள் "காபோன் மக்களின் சார்பாக" அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.
  • அதிபர் அலி போங்கோ தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • சமீபத்தில் நடைபெற்றத் தேர்தலில் அவர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
  • அந்நாட்டில் 2 மில்லியனுக்கும் குறைவான மக்களே உள்ளனர்.
  • 1885 ஆம் ஆண்டில் பிரான்சு அரசு காபோன் பகுதியினை ஆக்கிரமித்தது.
  • 1910 ஆம் ஆண்டில், பிரெஞ்சு நாட்டின் பூமத்திய ரேகை பகுதி சார்ந்த ஆப்பிரிக்காவின் நான்கு பிரதேசங்களில் ஒன்றாக காபோன் மாறியது.
  • 1960 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று, காபோன் பிரான்சு நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
  • அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோரம் அமைந்துள்ள இந்த நாடானது கேமரூன், ஈக்குவடோரியல் கினியா மற்றும் காங்கோ குடியரசு ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்