TNPSC Thervupettagam

காப்பீடுகள் மீதான வரி விகிதங்களின் மறுபரிசீலனை

September 21 , 2024 6 days 50 0
  • சரக்கு மற்றும் சேவை வரி சபையானது, பல்வேறு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் தவணைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை பரிந்துரை செய்வதற்காக 13 பேர் கொண்ட ஒரு அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது.
  • தற்போது, காப்பீட்டுத் தவணைகளுக்கு 18 சதவீதச் ​​சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்கப் படுகிறது.
  • கூடுதலாக, காலக் காப்பீடு, முதலீட்டுத் திட்டங்களுடன் கூடிய ஆயுள் காப்பீடு மற்றும் மறு காப்பீடு உள்ளிட்ட ஆயுள் காப்பீடுகளுக்கான வரி விகிதங்களை பரிந்துரைக்கும் பணியை இந்தக் குழு மேற்கொள்கிறது.
  • 2023-24 ஆம் நிதியாண்டில், சுகாதார காப்பீட்டுத் தவணைகள் மீதான GST வரி மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மொத்தம் 8,262.94 கோடி ரூபாய் வசூலித்துள்ளன.
  • கூடுதலாக, சுகாதார மறுகாப்பீட்டுத் தவணைகள் மீதான GST வரி மூலம் 1,484.36 கோடி ரூபாய் ஆனது வசூலிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்