சரக்கு மற்றும் சேவை வரி சபையானது, பல்வேறு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் தவணைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை பரிந்துரை செய்வதற்காக 13 பேர் கொண்ட ஒரு அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது.
தற்போது, காப்பீட்டுத் தவணைகளுக்கு 18 சதவீதச் சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்கப் படுகிறது.
கூடுதலாக, காலக் காப்பீடு, முதலீட்டுத் திட்டங்களுடன் கூடிய ஆயுள் காப்பீடு மற்றும் மறு காப்பீடு உள்ளிட்ட ஆயுள் காப்பீடுகளுக்கான வரி விகிதங்களை பரிந்துரைக்கும் பணியை இந்தக் குழு மேற்கொள்கிறது.
2023-24 ஆம் நிதியாண்டில், சுகாதார காப்பீட்டுத் தவணைகள் மீதான GST வரி மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மொத்தம் 8,262.94 கோடி ரூபாய் வசூலித்துள்ளன.
கூடுதலாக, சுகாதார மறுகாப்பீட்டுத் தவணைகள் மீதான GST வரி மூலம் 1,484.36 கோடி ரூபாய் ஆனது வசூலிக்கப்பட்டது.