இது காப்பீட்டுச் சட்டம் 1938, ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம், 1956 மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 1999 ஆகியவற்றைத் திருத்தி அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புதிய காப்பீட்டுத் திருத்த மசோதாவானது, காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை முன்மொழிகிறது.
இந்தியக் காப்பீடு வழங்கீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான வரம்பு ஆனது 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும்.
வெளிநாட்டு மறு காப்பீட்டாளர்களுக்குச் சொந்தமான நிகர நிதியின் (சொத்து மற்றும் கடன்களுக்கு இடையே உள்ள வேறுபாடு) தேவையினையும் சுமார் 5,000 கோடி ரூபாயில் இருந்து 1,000 கோடி ரூபாயாகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் 25 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் 34 ஆயுள் காப்பீடு சாராத அல்லது பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன.