TNPSC Thervupettagam

காப்புரிமைகள் (திருத்தம்) விதிகள், 2024

March 23 , 2024 250 days 349 0
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆனது, 2003 ஆம் ஆண்டு காப்புரிமை விதிகளை (“திருத்தப்பட்ட விதிகள்”) திருத்தியமைப்பதற்காக 2024 ஆம் ஆண்டு காப்பு உரிமைகள் (திருத்தம்) விதிகளை அறிவித்துள்ளது.
  • திருத்தப்பட்ட விதிகள் ஆனது ஏற்கனவே வெளியிடப்பட்ட தேதி முதல் (அதாவது மார்ச் 15, 2024) நடைமுறைக்கு வந்துள்ளன.
  • முந்துரிமை தேதி அல்லது விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யும் தேதியிலிருந்து (இரண்டில் எது முந்தையதோ அதன் படி) 48 மாதங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த, மதிப்பீட்டுக் கோரிக்கையினை (RFE) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவானது தற்போது 31 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
  • சம்பந்தப்பட்ட வெளிநாட்டு விண்ணப்பங்கள் தொடர்பான எந்தவொரு “புதுப்பிக்கப் பட்ட” தகவலும் முதல் மதிப்பீட்டு அறிக்கையைப் (FER) பெற்ற மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • 24B மற்றும் 24C ஆகிய விதிகளின் கீழ், விண்ணப்பதாரர்  மதிப்பீட்டு அறிக்கைக்கான பதில் குறிப்பினைத் தாக்கல் செய்வதற்கு மூன்று மாதங்கள் வரை நீட்டிப்பு கோரலாம்.
  • முன்னதாக, 138 வது விதி (பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை நீட்டிக்கும் அதிகாரம்) 1 மாத காலத்திற்கு ஒரு சில விதிவிலக்குகளுடன், தாமதங்களை ஏற்றுக் கொள்வதற்கு என்று கட்டுப்பாளருக்கு அதிகாரம் வழங்குகிறது.
  • 138வது விதியின் தலைப்பு ஆனது தற்போது 'குறிப்பிட்ட நேரத்தை நீட்டிக்கும் அல்லது தாமதத்தை ஏற்றுக் கொள்ளும் அதிகாரம்' என மாற்றப்பட்டுள்ளது.
  • முன்னதாக, ஒவ்வோர் ஆண்டும் செயல்பாட்டு அறிக்கையானது தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே செயல்பாட்டு அறிக்கையானது சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்