காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி
November 1 , 2017 2612 days 1011 0
பிரிஸ்பனில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இது இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பெறும் சர்வதேச தங்கப் பதக்கமாகும். இதற்கு முன் சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற ISSF துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி பிரிவில், ஜிது ராயுடன் சேர்ந்து அவர் தங்கம் வென்றிருந்தார்.
இக்காமன்வெல்த் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தீபக் குமார் வெண்கலம் வென்றிருக்கிறார்.