பிப்ரவரி 14 முதல் 18 வரை ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் பகுதியில் நடைபெற்ற 5வது காமன்-வெல்த் நாடுகளுக்கான பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் “A” அணி தங்கம் வென்றுள்ளது.
கிரண்குமார் நாடார் தலைமையிலான இந்தியாவின் “A” அணி ஆஸ்திரேலிய அணியை வென்றுள்ளது.
இந்த காமன்வெல்த் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டிகள் காமன்வெல்த் நாடுகளுக்கிடையே நடைபெறும்.
இதன் முதல் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.
இதன் நான்காவது போட்டி ஸ்காட்லாந்தின் கிலாஸ்கவ் நகரில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது.