- ஆஸ்திரேலியா நாட்டின் கோல்டு கோஸ்ட் நகரில் (Gold Coast) ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் to 15 தேதி வரை நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்றுள்ள தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.50 லட்சம் உயர் ரொக்க ஊக்கத் தொகையை (High cash incentives) அறிவித்துள்ளது.
- இந்த 21-வது காமன்வெல்த் போட்டியில் 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர்கள்
- சத்யன் டேபுள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் மற்றும் ஆண்களுக்கான டேபுள் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதனோடு சேர்ந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இவர் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.
- சரத் கமல் ஆண்களுக்கான இரட்டையர் டேபுள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும், டேபுள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சரத் கமல் வென்றுள்ள மூன்றாவது பதக்கம் இதுவாகும். பெண்களுக்கான இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியிலும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியிலும் தீபிகா பல்லிகல் கார்த்திக் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
- ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் சவுரப் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- பெண்களுக்கான ஸ்குவாஷ் இரட்டையர் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் சதிஸ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.