உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டியில் இந்தியப் பளுதூக்கும் வீராங்கனை ஜில்லி தலாபெஹேரா தங்கம் வென்றார்.
இவர் மொத்தம் 322 கி.கி. எடையைத் தூக்கி ஸ்நாட்ச் பிரிவில் (147 கி.கி) ஒரு தேசியச் சாதனையையும் படைத்தார்.
அடுத்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்கு நேரடியாகத் தேர்வான 3வது இந்தியப் பளு தூக்கும் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
இதற்கு முன்பாக அசிந்தா சியோலி (73 கி.கி) தங்கம் வென்றதைத் தொடர்ந்து அவர் காமன்வெல்த் போட்டிகளுக்குத் தேர்வானார்.