TNPSC Thervupettagam

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022

August 10 , 2022 709 days 625 0
  • இந்த ஆண்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் 18வது பங்கேற்பாகும்.
  • 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் உட்பட இந்தியா பெற்ற ஒட்டு மொத்தப் பதக்க எண்ணிக்கை 61 ஆகும்.
  • சைகோம் மீராபாய் சானு இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தினைப் பெற்றுத் தந்தார்.
  • மகளிர் அணி தங்கப் பதக்கத்தையும், வென்றதையடுத்து லான் பவுல்ஸ் என்ற உருட்டுப் பந்தாட்டப் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது.
  • மேலும் இந்தப் போட்டியில் ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.
  • டேபிள் டென்னிஸ் (மேசைப் பந்தாட்டம்) போட்டியில் ஷரத் கமல் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • ஜூடோ போட்டியில் சுஷிலா தேவி லிக்மாம்பம் (வெள்ளி), துலிகா மான் (வெள்ளி) மற்றும் விஜய் குமார் யாதவ் (வெண்கலம்) ஆகியோர் அடங்கிய இந்திய அணி இந்தப் போட்டியினைச் சிறப்பாக முடித்தது.
  • ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சௌரவ் கோசல் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் / சவுரவ் கோசல் ஆகியோர் அடங்கிய இணை வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.
  • 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி தனது சிறந்தப் பங்கேற்பினை வெளிப்படுத்தியது.
  • அந்தப் போட்டிகளில் ஆசியாவின் மாபெரும் அணியான இந்திய அணி 38 தங்கம் உட்பட 101 பதக்கங்களை வென்றது.
  • ஒட்டு மொத்தமாக வென்றப் பதக்கங்களின் அடிப்படையில், புது டெல்லி 2010 (101), மான்செஸ்டர் 2002 (69), கோல்ட் கோஸ்ட் 2018 (66), மற்றும் கிளாஸ்கோ 2014 (64) ஆகியப் போட்டிகளுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு பர்மிங்காம் போட்டிகளில் இந்திய அணியின் பங்கேற்பானது 5வது சிறந்தப் பங்கேற்பாகும்.

மல்யுத்தம்

பளு தூக்குதல்

தடகளம்

பூப்பந்தாட்டம் (பாட்மிண்டன்)

குத்துச்சண்டை

மேசைப் பந்தாட்டம் (டேபிள் டென்னிஸ்)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்