TNPSC Thervupettagam

காமா கதிரினை வெளியிடும் அண்டம்

April 15 , 2021 1230 days 672 0
  • இந்திய ஆராய்ச்சியாளர்கள் அரிதான மற்றும் வெகு தொலைவில் அமைந்த காமா கதிரினை வெளியிடும் அண்டம் ஒன்றினைக் கண்டறிந்துள்ளனர்.
  • புதிதாக கண்டறியப்பட்ட அந்த அண்டத்திற்கு NLS1 (குறுகிய பட்டையுடைய செய்பெர்ட் 1 – Narrow Line Seyfert 1) அண்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த அண்டங்கள் AGN (Active Galactic Nuclei) அல்லது செயல்பாட்டிலுள்ள அண்டம் சார்ந்த அணுக்கருக்கள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • சாதாரணமான அண்டங்களுடன் ஒப்பிடுகையில், இவை ஆயிரம் மடங்கு ஆற்றலை வெளியிடும்.
  • நுண்ணலை, ரேடியோ, அகச்சிவப்பு, ஒளி அலை, X-கதிர், புற ஊதா மற்றும் காமா கதிர் போன்ற அலைக்கற்றை வடிவில் கண்டறியப் பட்டுள்ள இந்த துடிப்பான அண்டங்களின் உமிழ்வுகள் விண்மீன் சாராத (வெப்பமற்ற) வகையைச் சார்ந்தவை ஆகும்.
  • அமெரிக்காவின் ஹவாயில் அமைந்துள்ள நிலத்தில் அமைந்த உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றான சுபாரு தொலைநோக்கி இதற்குப் பயன்படுத்தப் பட்டது.
  • பேரண்டம் சுமார் 4.7 பில்லியன் ஆண்டுகள் என்ற வயதில் இருந்த போது தான் இந்த அண்டம் உருவாகியுள்ளது.
  • பேரண்டத்தின் தற்போதைய வயது 13.8 பில்லியன் ஆண்டுகளாகும்.
  • நைனிடாலிலுள்ள ஆர்யபட்டா அறிவியல் அராய்ச்சி கண்காணிப்பு நிறுவனத்தின் (Aryabhatta Research Institute of Observational Science – ARIES) அறிவியலாளர்களால் இது கண்டறியப் பட்டது.
  • இது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.

Redshift (சிவப்புப் பக்க பெயர்ச்சி)

  • 1929 ஆம் ஆண்டில் எட்வின் ஹப்பில் என்பவர் பேரண்டம் விரிவடைகிறது என்று அறிவித்ததிலிருந்து அண்டங்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்கின்றன என்பது கவனத்தில் கொள்ளப் பட்டது.
  • இவ்வாறு குறுகிக் கொண்டே வரும் அண்டங்களிலிருந்து வரும் அலைநீள வடிவிலான ஒளியானது சிவப்புப் பக்கப் பெயர்ச்சி எனப்படுகிறது.
  • அதாவது அண்டங்கள் எவ்வளவு தொலைவில் உள்ளதோ அதைப் பொறுத்து ஒளியின் அலைநீளம் சிவப்பாகவும் சிகப்புப் பக்கப் பெயர்ச்சியின் மதிப்பு அதிகமாகவும் இருக்கும்.
  • அத்தகைய அண்டங்கள் சிவப்புப் பக்கப் பெயர்ச்சி அண்டங்கள் என வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்