காயங்கள் மற்றும் வன்முறையைத் தடுத்தல் : ஒரு கண்ணோட்டம்
December 15 , 2022 709 days 374 0
காயங்கள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேம்பாடு குறித்த 14வது உலக மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
உலக சுகாதார நிறுவனமானது, “காயங்கள் மற்றும் வன்முறையைத் தடுத்தல் : ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
2019 ஆம் ஆண்டில் பதிவான 4.4 மில்லியன் காயங்கள் சார்ந்த இறப்புகளில், தற்செயலாக ஏற்பட்ட காயங்களால் 3.16 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும், வன்முறை தொடர்பாக ஏற்பட்ட காயங்கள் 1.25 மில்லியன் இறப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இவற்றில் மூன்றில் ஒரு நபர் சாலைப் போக்குவரத்து சார்ந்த விபத்துகளால் இறந்தவர்கள் ஆவர்.
6 இறப்புகளில் ஒருவர் தற்கொலையினாலும், 9 இறப்புகளில் ஒன்று கொலைகள் மூலமாகவும், 61 இறப்புகளில் ஒன்று போர் மற்றும் மோதல்களினாலும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
5 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் பதிவான இறப்புகளுக்கான முதல் 5 காரணங்களில் சாலைப் போக்குவரத்து விபத்துகள் தொடர்பாக ஏற்பட்ட காயங்கள், கொலை மற்றும் தற்கொலை ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன.
15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மரணத்திற்கு சாலைப் போக்குவரத்து தொடர்பான காயங்களே முக்கியக் காரணமாகும்.
5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு சாலைப் போக்குவரத்து தொடர்பான காயங்கள் இரண்டாவது முக்கியக் காரணமாகும்.
5 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு நீரில் மூழ்கி உயிரிழத்தல் 6வது முக்கியக் காரணமாகும்.
காயங்கள் மற்றும் வன்முறைகளால், ஒவ்வோர் ஆண்டும் ஆண்கள் பெண்களை விட இரண்டு மடங்கு அதிகமான அளவில் இறப்பினை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர்.
பெண்கள் இறப்பதற்கான முக்கியக் காரணங்கள் என்பவை சாலைப் போக்குவரத்து தொடர்பான காயங்கள், தவறி விழுதல் மற்றும் தற்கொலைகள் ஆகியனவாகும்.