பூமிக்கு மிக அருகில் காணப்படும், கயா BH3 என்ற பிரம்மாண்டமான இவ்வகையான மூன்றாவது கருந்துளையை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
BH3 கருந்துளையின் 33 சூரிய நிறைகள் ஆனது, அண்டத்தின் தற்போதைய அதி எடை கொண்ட சிக்னஸ் X-1 கருந்துளையினை விட 12 சூரிய நிறைகள் அதிகமாகும்.
கயா BH3 ஆனது, அக்விலா திரளில் சுமார் 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து உள்ளது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கயா தொலைநோக்கி மூலம் இந்த மூன்று கருந்துளைகளும் கண்டறியப்பட்டன.
பொதுச் சார்பியல் கோட்பாட்டின் ஒரு முக்கியக் கணிப்பாக, கருந்துளை உருவாவதை உறுதி செய்ததற்காக என்று 2020 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.