TNPSC Thervupettagam

காய்கறிகளுக்கான சிறப்பு மையம்

August 11 , 2022 709 days 472 0
  • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமர், உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி நகரில் நிறுவப்பட உள்ள இந்திய-இஸ்ரேலியக் காய்கறிகள் சிறப்பு மையத்திற்கு அடிக்கல்லை நாட்டினார்.
  • இந்திய-இஸ்ரேலியச் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய நாட்டின் நிபுணர்கள் இந்த மையத்திற்கானத் தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்.
  • தோட்டக் கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கான திட்ட அமைப்பானது, செயல் விளக்க நோக்கங்களின் அடிப்படையில் இந்த மையத்தின் உள்கட்டமைப்புகளைக் கட்டமைப்பதற்கான நிதியுதவியினை வழங்குகிறது.
  • இஸ்ரேலியத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இந்த மாநிலத்தில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
  • இந்தச் சிறப்பு மையங்கள் தோட்டக்கலைத் துறையில் உள்ள சமீபத்தியத் தொழில் நுட்பங்களுக்கானச் செயல்விளக்க மையமாகவும், பயிற்சி மையங்களாகவும் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்