TNPSC Thervupettagam

காரீஃப் பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

June 14 , 2023 405 days 204 0
  • காரீஃப் அல்லது பருவமழை காலத்தில் விதைக்கப்பட்ட நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 2,183 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
  • இது கடந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டதை விட குவிண்டாலுக்கு சுமார் 143 ரூபாய் என்ற அளவில் அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • 17 காரீஃப் பருவ பயிர்கள் மற்றும் வகைகளுக்கான 2023-24 ஆம் ஆண்டிற்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வு தொடர்பான ஒரு முடிவானது மத்தியப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) கூட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டது.
  • பாசிப் பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு 8,558 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில் இது கடந்த ஆண்டை விட 803 ரூபாய் அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • காரீஃப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வில், இப்பயிருக்கான உயர்வு மிக அதிகமாகும்.
  • துவரை அல்லது அர்ஹர் பருப்பிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது ஒரு குவிண்டாலுக்கு 7,000 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • இது உற்பத்திச் செலவை விட 58% அதிகமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்