TNPSC Thervupettagam

கார்கில் பகுதியில் நீர்மின் நிலையம்

November 12 , 2017 2598 days 799 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 1.5 மெகாவாட் ஆற்றல் கொண்ட சிறிய நீர்மின் நிலையத்தை (Small Hydro Power - SHP) துவங்கியுள்ளது. இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் உள்ள பியாராஸ் திராஸ் (Biaras Drass) என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • இது பிரதமரின் இலடாக் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முன் முயற்சியின் (Prime Minister’s Ladakh Renewable Energy Initiative) முதல் திட்டம் ஆகும்.
  • பியாராஸ் சிறு நீர்மின் நிலையத்தை கட்டமைத்த நிறுவனங்கள்,
    • கார்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் - Kargil Renewable Energy Development Agency (KREDA)
    • இலடாக் தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டுக் குழு - Ladakh Autonomous Hill Development Council (LAHDC)
  • இலடாக் பகுதியில் டீசல் எரிபொருள் மீதான சார்பைக் குறைக்கவும், உள்ளூர் மின்சாரத் தேவைகளை உள்ளூரிலேயே புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலமாக பூர்த்தி செய்வதும் இலடாக் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முன் முயற்சியின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்