புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 1.5 மெகாவாட் ஆற்றல் கொண்ட சிறிய நீர்மின் நிலையத்தை (Small Hydro Power - SHP) துவங்கியுள்ளது. இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் உள்ள பியாராஸ் திராஸ் (Biaras Drass) என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இது பிரதமரின் இலடாக் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முன் முயற்சியின் (Prime Minister’s Ladakh Renewable Energy Initiative) முதல் திட்டம் ஆகும்.
பியாராஸ் சிறு நீர்மின் நிலையத்தை கட்டமைத்த நிறுவனங்கள்,
கார்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் - Kargil Renewable Energy Development Agency (KREDA)
இலடாக் தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டுக் குழு - Ladakh Autonomous Hill Development Council (LAHDC)
இலடாக் பகுதியில் டீசல் எரிபொருள் மீதான சார்பைக் குறைக்கவும், உள்ளூர் மின்சாரத் தேவைகளை உள்ளூரிலேயே புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலமாக பூர்த்தி செய்வதும் இலடாக் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முன் முயற்சியின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.