இது பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியப் படைகள் பெற்ற வெற்றியை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு போரில் பங்கேற்ற வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு மே 03 ஆம் தேதியன்று, முதல் ஊடுருவல் குறித்து உள்ளூர் கால்நடை மேய்ப்பர்களால் அளித்தப் புகாரையடுத்து, இந்திய இராணுவம் ஆனது ‘ஆபரேஷன் விஜய்’ எனப்படும் நடவடிக்கையினைத் தொடங்கியது.
ஆபரேஷன் விஜய் நடவடிக்கையின் இலக்கானது பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் ஊடுருவல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள இந்தியப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதாகும்.
இந்திய இராணுவத்திற்கு உதவி வழங்கும் விதமாக இந்திய விமானப்படையானது, மே 26 ஆம் தேதியன்று சஃபத் சாகர் என்ற நடவடிக்கையின் கீழ் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
1999 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதியன்று கார்கிலில் உள்ள அனைத்து இராணுவச் சோதனை முகாம்களை மீட்டெடுத்தப் பிறகு, இந்திய இராணுவமானது விஜய் ராணுவ நடவடிக்கை வெற்றியடைந்ததாக அறிவித்தது.