வரலாற்றிலேயே முதல் முறையாக கார்பன் இழையினால் மட்டுமே ஆன பயணிகள் இரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
எடை மற்றும் மாசுபாட்டினை வெகுவாகக் குறைத்து, முற்றிலும் கார்பன் இழையினால் கட்டமைக்கப்பட்ட வரலாற்றின் முதல் பயணிகள் இரயில் இதுவாகும்.
கார்பன் இழையினால் ஆன இந்த இரயில் ஆனது, 87 மைல் வேகம் வரை பயணிக்க கூடியது என்பதோடு இது எஃகினால் ஆன வழக்கமான இரயில்களை விட சுமார் 7% குறைவான ஆற்றலைப் பயன்படுத்தும்.
இது வாகனங்கள் அல்லது விமானங்களை விட ஒரு பயணிக்குக் குறைவான காற்று மாசுபாட்டையே உருவாக்குகிறது.