இறக்குமதிகள் மீது கார்பன் வரி விதிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிதல் ஆனது, அதன் உற்பத்தித் துறைக்கு ஒரு “பெரிய சேதம்” ஆக மாறக் கூடிய ஒரு ‘தவறான’ நடவடிக்கையாகும்.
இது ஆரம்பத்தில் இரும்பு மற்றும் எஃகு, சிமெண்ட், அலுமினியம், உரங்கள் மற்றும் மின்சார ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றின் மீது விதிக்கப்படும்.
இந்திய அரசு தனது சொந்தக் கார்பன் வரியை விதிப்பதன் மூலம் இந்த நடவடிக்கைக்கான எதிர் நடவடிக்கையினை மேற்கொள்ளும்.
அதிக கார்பன் பொருட்கள் மீது உள்நாட்டு வரிகளை விதித்து, அதன் மூலம் திரட்டப் படும் வருவாயினை பசுமை ஆற்றல் மாற்றத்திற்குப் பயன்படுத்தும் உத்தியை இந்தியா பரிசீலித்து வருகிறது.
இந்த அணுகுமுறையானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி மீதான கார்பன் வரியைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.