TNPSC Thervupettagam

கார்பன் எல்லை சீரமைப்புச் செயல்முறை

December 27 , 2022 572 days 424 0
  • ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் சந்தையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தத்தை தனது குழுவிற்குள் அறிவித்தது.
  • இந்த சீர்திருத்தம், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், காலநிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கும் வேண்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் லட்சியங்களில் மையமாக செயல்படுகிறது.
  • விரைவுபடுத்தப்பட்ட கரிம உமிழ்வுக் குறைப்பு, தொழில்களுக்கான இலவசப் பண வழங்கீடுகளை படிப்படியாக நீக்குதல் போன்ற விதிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
  • கார்பன் எல்லை வரி என்பது மிகவும் தனித்துவமான ஒரு முன்முயற்சியாகும்.
  • இது 2050 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தை கார்பன்-நடுநிலையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட உலகின் பெரிய முதல் படியைக் குறிக்கிறது.
  • இது கார்பன் எல்லைச் சீரமைப்பு செயல்முறை (CBAM) மற்றும் கார்பன் எல்லை வரி என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது சில ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகளுக்கு மாசு மதிப்புகளைச் சேர்க்கிறது.
  • இந்த நடவடிக்கையானது அதிக கார்பன் உமிழும் தொழில்கள் கடுமையான உமிழ்வு கட்டுப்பாட்டுத் தரநிலைகளைக் கடைபிடிக்கச் செய்வதை அவசியமாக்குகிறது.
  • கார்பன் எல்லை வரி என்பது கார்பன் வெளியேற்றத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதிக்கு விதிக்கப்படும் ஒரு வரியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்