TNPSC Thervupettagam

கார்பன் சமத்துவமின்மையை எதிர்கொள்தல் அறிக்கை

October 7 , 2020 1382 days 595 0
  • ஆக்ஸ்பேம் சர்வதேச நிறுவனம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் ஆகியவைகார்பன் சமத்துவமின்மையை எதிர்கொள்தல்என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1990லிருந்து 2015 வரையிலான தரவுப் பகுப்பாய்வு

  • மனித இனத்தின் செல்வமிக்க 1% மக்கள் ஒட்டுமொத்தமாக 15% உமிழ்வுகளுக்குப் பொறுப்பாக உள்ளனர். ஆனால் 50% ஏழை மக்கள் 7% உமிழ்வுகளுக்கு மட்டுமே பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
  • செல்வமிக்க 10% மக்கள் உலகளாவிய அளவில் 31% கார்பன் பட்ஜெட்டை அழித்துள்ளனர். ஆனால் ஏழை மக்களில் 50% நபர்கள் 4% அளவில் மட்டுமே கார்பன் பட்ஜெட்டைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • கார்பன் பட்ஜெட் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை வரம்பிற்குள் வைத்திருப்பதற்காக குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதிக்கப்படும் ஒட்டுமொத்த கார்பன் டை ஆக்ஸைடின் ஒரு அலகாகும்.
  • செல்வமிக்க 10% நபர்கள் 46% அளவிற்கு உமிழ்வு வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளனர். ஆனால் ஏழைகளில் 50% நபர்கள் 6% உமிழ்வுகளுக்குக் காரணமாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்