ஜோத்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் புதுமையான தொழில் நுட்பம் ஆனது, கார்பன் டை ஆக்சைடைப் பிடிப்பதற்கும், கழிவுநீரைச் சுத்திகரித்து மின்சாரத்தை உருவாக்குவதற்கும் பாசிக்களின் (ஆல்கா) துணையுடன் இயங்கும் எரிபொருள் கலங்களைப் பயன்படுத்துகிறது.
கனல் வாயுக்களை பாசி நிறைந்த குளங்களில் குமிழிகளாக்குதல் என்ற வழக்கமான செயல் முறையுடன் ஒப்பிடும்போது, அவற்றின் மறைமுக உயிர்வேதியியல் செயல் முறை மிகவும் செயல் திறன் மிக்கதாக உள்ளது.
இது கார்பன் டை ஆக்சைடை கார்பனேட்டுகளாக மாற்றுவதோடு, நீரில் உள்ள கனிம கார்பனின் கரைதிறனை அதிகரிக்கிறது, இதனால் இது நீரில் கார்பன் தக்க வைப்புத் திறனை அதிகரிக்கிறது.
இந்தத் திறந்த குளங்கள் சார்ந்த செயல்முறைகளை விட ஒளிசார் உயிரி உலைகள் போன்ற முழுவதும் மூடப்பட்ட அமைப்புகளின் பயன்பாடு விரும்பத் தக்கதாக கூறப் படுகிறது.
அவை பைகார்பனேட்டுகள் CO2 ஆக சிதைவதைத் தடுப்பத்தோடு, அதன் pH அளவைப் பேணுகின்றன.
கூடுதலாக, இந்தத் தொழில்நுட்பம் ஆனது கழிவுநீரைப் பயன்படுத்துவதோடு, இது கழிவு நீர்நிலை போன்ற நிலைமைகளில் செழித்து வளரும் திறன் கொண்ட ஒரு வெப்ப நிலை தாங்கும் ஆல்கா திரிபினை (குளோரெல்லா வல்காரிஸ்) பயன்படுத்துகிறது.