நாசாவின் செயற்கைக்கோள் ஆனது, விண்வெளியில் அகச்சிவப்பு கார்பன் டை ஆக்சைடு துருவ மின்னொளி காணப் படுவதைக் கண்டறிந்துள்ளது.
துருவ மின்னொளி என்பது வானத்தில் ஒளிர்வினை வெளிப்படுத்தும் இயற்கை ஒளிக் காட்சி ஆகும்.
மின்னூட்டம் பெற்றத் துகள்கள் கிரகத்தின் வளிமண்டலத்தில் மோதும்போது, அவை பல்வேறு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் தொடர்பு கொள்கின்றன.
அவற்றுள் கார்பன் டை ஆக்சைடு வாயுவும் ஒன்றாகும்.
பூமியிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மூலக் கூறுகள் துருவ மின்னொளியால் தூண்டப் படும் போது, அவை அகச்சிவப்புக் கதிர் வீச்சை வெளியிடுகின்றன.